பால் மாவின் விலையை குறைத்த மில்கோ நிறுவனம்

4 weeks ago
aivarree.com

இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் மாவின் விலையை குறைக்கவுள்ளதாக மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ பால் மா பக்கற் ஒன்றின் விலை 190 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலைக்கு 2,585 ரூபாவாகும்.

400 கிராம் பக்கற் 75 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1,050 ரூபா எனவும் மில்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.