நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘யுக்திய’ பொலிஸ் விசேட நடவடிக்கைக்கு எதிராக கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட மௌனப் போராட்டத்தை ஒரு குழுவினர் குழப்பியடிக்க முற்பட்டுள்ளனர்.
முகமூடி அணிந்த சில ஆண்கள் போராட்டக்காரர்களை குழப்புவதையும், அவர்களின் போராட்டத்தை நிறுத்துமாறு வலியுறுத்துவதையும் காட்டும் காணொளிகள் வெளியாகியுள்ளன.
அவர்களால் போராட்டத்தில் ஈடுபடும் ஒருவர் தாக்கப்படுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடமும் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு பிரவேசித்த போலீசார் தலையிட்டு, குண்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.