இலங்கையில் செய்மதி இணைய சேவைகளை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் லங்கா (பிரைவேட்) லிமிடெட் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு சேவை வழங்குநர் உரிமத்தை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது .
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் 17B பிரிவின் கீழ், Starlink Lanka (Private) Limited க்கு செய்மதி இணைய சேவைகளை வழங்குவதற்காக தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிமத்தை வழங்கியுள்ளது.
இந்த உரிமம் இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 12ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.