இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு – 12 பேர் உயிரிழப்பு

1 week ago
World
aivarree.com

இந்தோனேசியாவில், தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காணாமற்போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள கோரோண்டாலோ பகுதியில், சட்டவிரோதமாக இயங்கிவந்த தங்க சுரங்கமொன்றிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இந்த சுரங்கத்திலுள்ள சிறு குழிகளில், 30க்கும் மேற்பட்டோர் இறங்கி தங்கத்தை தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் புதையுண்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், 12 பேரின் உடல்களை மீட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

மேலும், காணாமற்போயுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.