கடமையை செய்ய தவறிய 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை – கிம்ஜாங் உன் அதிரடி உத்தரவு

1 week ago
World
aivarree.com

வட கொரியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 1000 பேர் உயிரிழந்தனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், கடமை தவறிய குற்றத்திற்காக 30 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஜூலை மாதம் பலத்த மழை காரணமாக அந்நாட்டின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதுடன், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால், 4 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன.15 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர்

இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவை தடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனர் என்றும் அவர்கள் கடமையை சரியாக செய்யாததால், பேரிழப்பு ஏற்பட்டு உள்ளதுடன் அவர்கள் ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னிலையில் அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றும்படி கிம்ஜாங் உன் உத்தரவிட்டதுடன் இதனையடுத்து, உயர் அதிகாரிகள் உட்பட 30 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது