காற்றின் வேகம் அதிகரிப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

1 week ago
Sri Lanka
aivarree.com

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அந்தவகையில் திருகோணமலை முதல் காங்கேசன்துறை, மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிலாபம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.