IMF நிபந்தனைகள் நாட்டிற்கு பாதகமானதல்ல – அநுர

1 week ago
Sri Lanka
aivarree.com

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நாட்டுக்கு பாதிப்பில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற வர்த்தக கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், தமது அரசாங்கமானது சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலக எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.