யெமனில் இயங்கும் ஹவுத்தி தீவுரவாதிகள் குழு, இஷ்ரேலுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்றை கடத்தியுள்ளது.
அத்துடன் அந்த கப்பலின் 24 அதிகாரிகளை பணயக்கைதிகளாக பிடித்துள்ளது.
பஹாமாஸ் கொடியுடன் செங்கடலில் பயணித்த கெலக்ஸி லீடர் என்ற கப்பலே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது.
இந்த கடத்தலுக்கு ஈரானே காரணம் என இஷ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த சம்பவம், காசா போர் மத்திய கிழக்கிலும் பரவுவதற்கான காரணமாக அமையலாம் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடத்தப்பட்ட கப்பல் அதிகாரிகள் காசா வைத்தியசாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும், அது CCTVயில் உறுதியாகி இருப்பதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.
இதனை அடுத்து இஸ்ரேல் படையினர் காசா வைத்தியசாலையை சுற்றிவலைத்திருப்பதாக கூறப்படுகிறது.