அம்பாறையில் சுமார் 4.5 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் அரச உத்தியோகத்தர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சூட்சமான முறையில் நீண்ட நாட்களாக ஐஸ் போதைப்பொருளை தனது மோட்டார் சைக்கிளில் விநியோகித்து வந்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் குறித்த நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.