அரச ஊழியர்கள் கோரும் சம்பள உயர்வை வழங்கினால் வெட் வரியை அதிகரிக்க நேரிடும்

1 week ago
Sri Lanka
aivarree.com

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் கோரும் சம்பள உயர்வை வழங்கினால், தற்போதுள்ள 18% வெட் வரியை 20% முதல் 21% வரை அதிகரிக்க நேரிடும் எனவும் பொதுமக்களை நசுக்கி இதுபோன்ற கோரிக்கையை அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாது எனவும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார்.

அரச சேவை தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.