தாறுமாறாக உயர்ந்துள்ள தங்கத்தின் விலை

2 weeks ago
aivarree.com

கொழும்பு செட்டியார்த் தெருவில் தங்கத்தின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. 

அண்மைக்காலமாக டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவடைந்து வருவதால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தங்க விற்பனையாளர்கள் சொல்கிறார்கள். 

தற்போதைய நிலவரத்தின் படி கொழும்பு செட்டியார்த் தெருவில் 24 கறட் தங்கம் ஒரு பவுன் 177,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 163,000 ரூபாவாகவும் நிலவுகிறது. 

எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியங்கள் இருப்பதாகவும் தங்க விற்பனையாளர்கள் கணிப்பிட்டுள்ளனர். 

எவ்வாறாயினும் உலக சந்தையில் தங்கத்தின் விலையில் கடந்த நாட்களில் வீழ்ச்சி போக்கு அவதானிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.