பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை மேலும் ஐந்து வழக்குகளில் இருந்து விடுவித்து செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ல் இவர் வெவ்வேறு திகதிகளில் பிறந்தநாள் கொண்டாடி மோசடியில் ஈடுட்டதாகவும்,பங்களாதேஷ் விடுதலைப் போரில் உயிர்நீத்த வீரர்கள் பற்றி தவறாக பேசியததாகவும் கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட நான்கு வழக்குகள் அவர் மீது பதிவுசெய்யப்பட்டது.
இவற்றை விசாரித்த டாக்கா நீதிமன்றம், ஐந்து வழக்குகளில் இருந்தும் கலீதா ஜியாவை விடுவித்து நேற்று உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.