முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் பயணித்த வாகனம் விபத்து

1 week ago
Sri Lanka
aivarree.com

வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் S.சிவமோகன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று (11) அதிகாலை 2.30 அளவில் இடம்பெற்றதாக கத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொத்துவில் – அறுகம்பை பகுதியிலிருந்து வவுனியா நோக்கி சென்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து நேரும் சந்தர்ப்பத்தில் வாகனத்தில் சிவமோகன் உள்ளிட்ட மூவர் பயணித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த விபத்தில் காயமடைந்த நபர், தற்போது தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.