கடந்த 24 மணித்தியாலத்தில் 42 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த மாதம் 31 ஆம் திகதி (31.07.2024) முதல் நேற்று (13.08.2024) வரையான காலப்பகுதியில் 408 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.