2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.
சந்தேக நபர் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் மேலதிக ஆங்கில வகுப்பு ஆசிரியர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
9 ஜூலை 2022 அன்று, கொழும்பு கறுவாத்தோட்டத்தில் உள்ள அப்போதைய பிரதமர் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.