9 சதவீதத்தால் குறையவுள்ள மின்கட்டணம்

8 months ago
aivarree.com

அடுத்த மாதம் முதல் மின்சார கட்டணம் 9 சதவீதத்தினால் குறையவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நீர்மின்னுற்பத்தி அதிகரிப்பின் காரணமாக அடுத்த மாதம் முதல் மின்சார கட்டணத்தை கணிசமாக குறைப்பதற்கு ஆராயப்பட்டு வருகிறது.

அதன்படி இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின்படி, 9 சதவீதத்தினால் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும்.

எனினும் அதற்கு மேல் குறைக்க வாய்ப்புகள் உள்ளனவா? என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இதுதொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று தகவலையும் அவர் வழங்கினார்.