தேர்தல் முறைப்பாடுகள் தொடர்ந்து அதிகரிப்பு

4 weeks ago
Sri Lanka
aivarree.com

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3041 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி 08ஆம் திகதி முதல் நேற்று வரையான 24 மணித்தியாலங்களில் 178 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகளில் 172 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.