மலேசிய பிரதமருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விசேட சந்திப்பு

1 week ago
Sri Lanka
aivarree.com

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் இன்று (09)கோலாலம்பூரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன் முருகனின் விசேட அழைப்பின் பேரில் உத்தியோகப்பூர்வ விஜயமாகஆளுநர் செந்தில் தொண்டமான் ஞாயிற்றுக்கிழமை மலேசியாவுக்குச் பயணமானார்

பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடனான சந்திப்பில் மலேசியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து ஆழமான கலந்துரையாடலை ஆளுநர் செந்தில் தொண்டமான் நடத்தியுள்ளார்

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் வலுவான இருதரப்பு உறவுகளை உருவாக்குவதற்கான சாதகமான காரணிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான அழைப்பையும் பிரதமர் இப்ராஹிம்க்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் விடுத்ததுடன், இலங்கையில் வாழும் பெருந்தோட்ட சமூகத்தின் 200 வருட நினைவு முத்திரையையும் மலேசியப் பிரதமருக்கு வழங்கியிருந்தார்.