மண் சரிவு – ஒருவர் பலி

10 months ago
Sri Lanka
aivarree.com

பேராதனை நகரில் இடம்பெற்ற மண் சரிவில் ஒருவர் பலியானார்.

68 வயதான ஒருவரே இவ்வாறு பலியானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 4 கடைகள் சிதைவடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒஹிய – இதழ்கஸ்ஸின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதனால் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பலாங்கொடை – பெலிஹில் ஓய பகுதியில் மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதனால் பதுளை – கொழும்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.