சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை

4 weeks ago
Sri Lanka
aivarree.com

தாய்லாந்தில் இருந்து அகற்றப்பட்ட பழைய நீர் குழாயின் புகைப்படத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்கள் ஊடாக நாட்டின் நீர் பாவனையாளர்களை சிலர் தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அவ்வாறான நீர் குழாய் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பயன்படுத்தப்படுவதில்லை எனவும் அது தாய்லாந்தில் உள்ள பழைய நீர்க் குழாய் எனவும் தெரியவந்துள்ளதாகவும் அந்தச் சபை அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது

கலடுவ நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வரும் நீர் விநியோகக் குழாய் வெடித்ததன் காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் பின்னணியில் இது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சபை குறிப்பிட்டுள்ளது.