எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான திலகரத்ன டில்ஷான், தீர்மானித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் பதவி வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பேருவளை அமைப்பாளராக முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் திலகரத்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (14) திலகரத்ன டில்ஷான் பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.