600 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் அழிப்பு

5 days ago
Sri Lanka
aivarree.com

600 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் வனாதவில்லுவ லாக்டோ தோட்டத்தில் வைத்து இன்று அழிக்கப்பட்டுள்ளன.

அதன்படி 2020 ஆம் ஆண்டு இந்த போதைப்பொருள் கையிருப்பு கைப்பற்றப்பட்டதுடன், அதில் 355 கிலோ 881 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் இருந்ததுடன், அது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து, கொழும்பில் இருந்து வனாத்தவில்லுவ லாக்டோ பிரசேதத்திற்கு விசேட பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டிருந்தது.

இன்னிலையில் அங்கு உயர் மின் உலையில் 19 பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின், ஐஸ், கொக்கெய்ன் உள்ளிட்ட 1890 கிலோ பெறுமதியான போதைப்பொருள் அழிக்கப்பட்டிருந்தன.