வரலாற்று சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

1 month ago
SPORTS
aivarree.com

கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.

நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் 34ஆவது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு கோலை பதிவு செய்தன் மூலம் கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.

இதேவேளை இவருக்கு அடுத்தபடியாக மெஸ்ஸி 838 கோல் அடித்து 2ஆவது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.