பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிக்க அரசியலமைப்புச் சபை அங்கீகாரம்

5 days ago
Sri Lanka
aivarree.com

சிரேஷ்ட மேலதிக சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்புச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சட்டமா அதிபராக கடமையாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் கடந்த 26ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், சட்டமா அதிபர் பதவி வெற்றிடமாகவே இருந்தது.

பின்னர் அந்த பதவியின் பணிகளை மேற்பார்வையிட பாரிந்த ரணசிங்க நியமிக்கப்பட்டார்.