பாகிஸ்தானில் அரச ஊழியர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை

1 month ago
World
aivarree.com

அரச ஊழியர்கள் அனுமதியின்றி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் பாகிஸ்தான் அரசாங்கம் புதிய உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.

பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராகத் தகவல்கள் வெளியிடுவதைத் தடுக்கும் வகையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அரச ஊழியர்கள் அனுமதியின்றி எந்தச் சமூக வலைத்தளத்தையும் பயன்படுத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.