CBSL இன் உத்தியோபூர்வ நாணய மாற்று விகிதம்

1 year ago
aivarree.com

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று சிறிதளவு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, நேற்று 315.70 ரூபாவாக காணப்பட்ட டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி இன்று 315.84 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அதேநேரம் நேற்று 332.87 ரூபாவாக காணப்பட்ட டொலரின் விற்பனை பெறுமதி இன்று 333.49 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.