ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடன் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

4 weeks ago
Sri Lanka
aivarree.com

நீர்வழங்கல் மற்றும் சுகாதாரநல மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடன் தொகையை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இலங்கை அரசு நீர்வழங்கல் மற்றும் சுகாதாரநல மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதிகள் 02 இனை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வீதம் 02 உபவேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதன் முதலாவது வேலைத்திட்டமான “நீர்வழங்கல் நடவடிக்கைகளில் காலநிலை தாங்குதிறன், அனைத்து தரப்பினர்களையும் உள்வாங்கல், சுற்றாடல் பேண்தகு நிலைமையை வலுப்படுத்தல்” அதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்தொகையைப் பெற்றுக்கொள்வதற்காக பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளது.

அதற்கமைய நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.