பிரபல சமூகவலைத்தளங்களில் ஒன்றான எலன் மஸ்க்கின் X தளத்திற்குப் பிரேசில் தடைவிதித்துள்ளது.
அண்மையில் பிரேசிலில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகம் மூடப்பட்ட நிலையில், ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கை, பிரேசில் உயர் நீதிமன்றம் விசாரணை செய்த நிலையில், அங்கு ஒரு சட்ட விவகார பிரதிநிதியை 24 மணி நேரத்திற்குள் நியமிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும் உயர் நீதிமன்றம் விதித்திருந்த குறித்த காலப்பகுதியில், எக்ஸ் தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்தநிலையில், பிரேசில் எக்ஸ் தளத்திற்குத் தடை விதிக்கப்பட்டதுடன், முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.