பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு – ஐ.நா விவசாய அமைப்பு எச்சரிக்கை

2 months ago
World
aivarree.com

ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வைரஸின் புதிய திரிபு தற்போது இனங்காணப்பட்டுள்ளதுடன் அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் கடினமானதாக உள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்போடியா, சீனா மற்றும் வியட்நாமில் அதிகமான தொற்று பதிவாகியுள்ளதுடன், மனித நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் பறவைக் காய்ச்சலின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிராந்திய முகாமையாளர் கச்சென் வோங்சதா போர்ஞ்சாய் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியில் கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்தவும், கோழிப் பண்ணைகளில் உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தல் மற்றும் பொது மக்களிடத்தில் விழிப்புணர்வை அதிகரிக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.