முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கையில் திருத்தம்

4 weeks ago
Sri Lanka
aivarree.com

2025 ஆம் ஆண்டு பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கல்வி அமைச்சின் தற்போதைய சுற்றறிக்கை அறிவுறுத்தல்களை திருத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்ளெடுக்கும் போது வௌிப்படையாகவும் , முறைகேடுகளைக் குறைப்பதற்குமே சுற்றறிக்ைகயில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு இணங்க கல்விக்கான சமமான அணுகலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, கடந்த வருடங்களில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் தற்போதைய சுற்றறிக்கை அறிவுறுத்தல்களை திருத்துவதற்கு கல்வி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அந்தவகையில், திருத்தப்பட்ட சுற்றறிக்கை அறிவுறுத்தல்களின்படி 2025 ஆம் ஆண்டு மற்றும் அதற்கு அடுத்த ஆண்டுகளுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.