தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1350 ரூபாயை வழங்க இணக்கம்

4 weeks ago
Sri Lanka
aivarree.com

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாளாந்த சம்பளமாக 1,350 ரூபாவும் மேலதிகமாக ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 50 ரூபா கொடுப்பனவும் வழங்குவதற்கு சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையில் இன்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ், பெருந்தோட்ட உரிமையாளர்கள் மற்றும் தோட்டத் தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

அதன்படி, இன்று முதல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு தொழிலாளர் ஆணையாளர் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.