போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்படாது

2 months ago
Sri Lanka
aivarree.com

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிரான நீதி நடவடிக்கைகள் எத்தகைய தடைகள் வந்தாலும் தடுக்கப்படாது என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளாரா என வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் நீதி நடவடிக்கைகளின் கீழ் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களை காப்பாற்றவும் கைதுகளை தடுக்கவும் பலர் முயற்சித்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்

மேலும் பொலிஸ் மா அதிபர் பதவியில் இல்லாவிட்டாலும் நீதித் திட்டம் நிறுத்தப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.