உணவு விஷமானதால் 43 பேர் வைத்தியசாலையில் அனுமதி

1 week ago
Sri Lanka
aivarree.com

உணவு விஷமானதால் தனியார் நிறுவனமொன்றின் 43 ஊழியர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பாதுக்க வட்டரக பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் 25 பெண்களும் 18 ஆண்களும் உள்ளதாகவும் அவர்கள் 20-40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது