2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் ஜூலை 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று (14) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தன.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை (15) காலை 9 மணி முதல் 11 மணி வரை தேர்தல் ஆணைக்குழுவில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது
அதனைமுன்னிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு அமைந்துள்ள சரண மாவத்தையை அண்மித்த பகுதி விசேட பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.