சிகாகோவில் ரயிலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – நால்வர் பலி

2 weeks ago
World
aivarree.com

அமெரிக்காவின் சிகாகோவில் ரயிலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்றும் அந்நாட்டு பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை 2024 ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்காவில் 378 பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.