4.6 கிலோ எடை கொண்ட தங்கப் பாறை கண்டுபிடிப்பு

1 year ago
World
aivarree.com

அவுஸ்திரேலிய நபரொருவர் 4.6 கிலோ கிராம் எடை கொண்ட தங்கப் பாறையைக் கண்டுபிடித்துள்ளார்.

இந்த தங்கப் பாறையின் பெறுமதியானது சுமார் 240,000 அவுஸ்திரேலிய டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது (£130,000; $160,000).

4.6 கிலோ எடையுள்ள பாறையில் 83 அவுன்ஸ் அல்லது சுமார் 2.6 கிலோ கிராம் தங்கம் இருந்துள்ளது.

1800 காலப் பகுதியில் அதிகளவான தங்கம் கிடைக்கும் இடமாக இருந்த விக்டோரியாவின் வயல் பகுதிகளிலிருந்தே இந்த தங்கப் பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற கண்டுபிடிப்புகள் அரிதானவை என்றாலும், அவுஸ்திரேலியாவில் உலகின் மிகப்பெரிய தங்க இருப்பு இருப்பதை இது வெளிக்காட்டியுள்ளது.