30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த இத்தாலியின் படுமோசமான மாஃபியா தலைவர் கைது

2 weeks ago
World
(58 views)
aivarree.com

இத்தாலியில் நீண்டகாலமாக தேடப்பட்டுவந்த மாஃபியா தலைவரான மேட்டியோ மெசினா டெனாரோ 30 ஆண்டுகளுக்குப் பிறகு சிசிலியில் கைது செய்யப்பட்டார்.

மெசினா டெனாரோ சிசிலியின் தலைநகரான பலேர்மோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

அவர் மோசமான ‘கோசா நோஸ்ட்ரா’ மாஃபியாவின் தலைவர் என்று கூறப்படுவதுடன், பல கொலைகள் தொடர்பாக 2002இல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.

அவரை கைது செய்யும் பணியில் 100க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஈடுபடுபத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மெசினா டெனாரோ ஒரு இரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.