பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 290 முறைப்பாடுகள் பதிவு

2 months ago
Sri Lanka
aivarree.com

பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக கடந்த ஆறு மாதங்களில், 290 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலான முறைப்பாடுகள், கொழும்பு மாவட்டத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலிருந்தும் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் மாதந்தம் கிடைக்கப்பெறுவதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.