269 ஓட்டங்களை ஆப்கானுக்கு வெற்றியிலக்காக நிர்ணயித்த இலங்கை

11 months ago
SPORTS
aivarree.com

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 268 ஓட்டங்களை குவித்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது இலங்கையுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இன்று காலை 10.00 மணிக்கு ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் ஆரம்பமான முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இலங்கையை பணித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியும் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இலங்கை அணி சார்பில் அதிகபடியாக சரித அசலங்க 91 ஓட்டங்களையும், தனஞ்சய டிசில்வா 51 ஓட்டங்களையும், பத்தும் நிஸ்ஸங்க 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் சார்பில் ஃபசல்ஹக் பாரூக்கி மற்றும் ஃபரீத் அகமட் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், முஜிபுர் ரஹ்மான், நூர் அகமட், அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

269 என்ற வெற்றியிலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் சற்று நேரத்தில் துடுப்பெடுத்தாடும்.