2024 பாரா ஒலிம்பிக் – இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்

2 weeks ago
SPORTS
aivarree.com

பாரிஸ் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் (F64) போட்டியில் இலங்கையின் சமித துலான் கொடிதுவக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

67.03 மீற்றர் தூரம் வரை தனது ஈட்டியை எறிந்து, தனது தனிப்பட்ட சிறந்த தூரத்துடன், துலான் F44 பிரிவில் தனது முந்தைய உலக சாதனையை அவர் புதுப்பித்துள்ளார்.

தனது ஐந்தாவது முயற்சியிலேயே சமித்த துலான் இந்த உலக சாதனையை நிலைநாட்டியமை குறிப்பிடத்தக்கது.