2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் நேற்று (2) நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் ஆரம்ப சுற்றில் கலந்துகொண்ட தருஷி கருணாரத்ன எட்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்
02 நிமிடங்கள் 7.6 செக்கன்களில் தருஷி தனது சுற்றை நிறைவு செய்துள்ளார்.
எவ்வாறாயினும், இன்று (3) மீண்டும் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன போட்டியிடுவதற்கான வாய்ப்புள்ளது.
முதல் சுற்றில், இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறாதவர்களுக்காக இந்த போட்டி நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.