2023 உலகின் சிறந்த மொடல் ; 2 ஆவது ரன்னர்-அப்பாக இலங்கை பெண்

1 year ago
Infotainment
aivarree.com

எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் நகரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற “Top Model of The World 2023 ” போட்டியில் இலங்கையின் சந்தானி பீரிஸ் 2 ஆவது ரன்னர்-அப் விருதினை வென்றுள்ளார்.

22 வயதான சந்தானி பீரிஸ் ஒரு மொடல் என்பதைத் தவிர, ஆடை வடிவமைப்பாளர் மற்றும் பாலே நடனக் கலைஞரும் ஆவார்.

இந்த போட்டியில் மெக்சிகோவின் மரியான மசியாஸ் வெற்றி பெற்றுள்ளார்.

கொலம்பியாவின் லீசி ரிவாஸ் மோரேனோ 1 ஆவது ரன்னர்-அப் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எகிப்தின் செங்கடல் கடற்கரையில் உள்ள சன்ரைஸ் ஒயிட் ஹில்ஸ் ஹோட்டலில் கடந்த 2 வாரங்கள் நடைபெற்ற இப் போட்டியில் 43 போட்டியாளர்கள் பங்கெடுத்தனர்.