2022 இல் AASLக்கு 27,647 மில்லியன் ரூபா வருமானம்

11 months ago
aivarree.com

விமான மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் கடந்த ஆண்டில் மொத்தம் 27,647 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.

AASL இன் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

27,647 மில்லியன் ரூபா வருமானத்தில் வரிக்கு பிந்தைய நிகர இலாபம் 4,803 மில்லியன் ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

AASL இன் 2022 ஆம் ஆண்டுக்கான இயக்கங்கள்

  • சர்வதேச விமான இயக்கங்கள் – 37,641
  • பயணிகள் இயக்கங்கள் – 5,503,198
  • சரக்கு இயக்கங்கள் – 173,597
  • overflying இயக்கங்கள் – 23,846
  • சேவையில் ஈடுபட்ட மொத்த தொழிலாளர்கள் – 3,854