20,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமையில்

3 months ago
Sri Lanka
aivarree.com

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் 322 பொசன் வலயங்கள், 296 அலங்கார தோரணங்கள் மற்றும் 4,600 அன்னதானசாலைகள் அடங்கலாக 6,000 நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 11,100 விகாரைகளில் பல்வேறு சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் பொசன் பண்டிகையை முன்னிட்டு 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 400 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், 700 இராணுவத்தினர், நாடு முழுவதும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். என்றும் 27,000 சமூக பொலிஸ் பாதுகாப்பு உறுப்பினர்கள் பொசன் பண்டிகையை முன்னிட்டு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இன்று ஆரம்பமாகும் ஹோமாகம தம்ம ரஷ்மி பொசோன் பிரதேசத்தை மையப்படுத்தி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.