ஓமான் கடற்பகுதியில் எண்ணெய் கப்பல் மூழ்கியதில் மூன்று இலங்கை பிரஜைகள் உட்பட 16 பணியாளர்கள் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மையத்தில் உள்ள ராஸ் மத்ரகாவின் தென்கிழக்கில் “கொமரோஸ் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருவதாக கடல்சார் பாதுகாப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
Prestige Falcon எனும் பெயருடைய குறித்த கப்பலில், 13 இந்திய பிரஜைகள் மற்றும் மூன்று இலங்கையர்கள் உள்ளிட்ட 16 பணியாளர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.