கடந்த 24 மணித்தியாலங்களில் 16 வயதுக்குட்பட்ட 11 சிறுவர்கள் வெவ்வேறு நபர்களால் துஷ்பிரயோகம் மற்று வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களில் ஒருவரான 52 வயதுடைய விவசாயி ஒருவருடத்திற்கு முன்னர் கபுகொல்லாவ பொலிஸ் பிரிவில் வசிக்கும் 13 வயதுடைய மூன்று சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் குடும்பத்தின் உறவினர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஏனைய சம்பவங்கள் கம்புருபிட்டிய, ஹுங்கம, வெலிகம, கதிர்காமம், நெல்லியடி, ஹங்கமுவ, கலவான மற்றும் மாத்தறை பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன.