ஹரிஷ் ஜெயராஜ் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி

1 year ago
Infotainment
aivarree.com

பல ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் நீண்டகாலமாக புதிய பாடல்கள் எவற்றையும் வெளியிடாமல் இருந்தார்.

அவரது இசையில் அண்மையில் லெஜண்ட் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது.

கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் துருவ நட்சத்திரம் படத்தின் “ஒரு மனம்” பாடல் வெளியாகி பல வருடங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது அந்த படம் குறித்த புதிய அறிவிப்பை ஹரிஷ் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்துக்கான பின்னணி இசை கோர்க்கும் நடவடிக்கைகளை டொல்பி 9.1.4 தொழில் நுட்பத்துடன் ஆரம்பித்திருப்பதாகவும், விரைவில் திரையரங்குகளில் சந்திப்பதாகவும் ஹரிஷ் அறிவித்துள்ளார்.