வங்கிகளில் இன்றைய டொலரின் பெறுமதி

1 year ago
aivarree.com

இலங்கையில் உள்ள சில வர்த்தக வங்கிகளில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

  • சம்பத் வங்கி : டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி நேற்று 315 ரூபாவாக இருந்தது. இன்று அது 318 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதி நேற்று 330 ரூபாவாக இருந்தது. இன்று அது 333 ரூபாவாக அதிகரித்துள்ளது.
  • கொமர்ஷல் வங்கி : டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி நேற்று 314.27 ரூபாவாக இருந்தது. இன்று அது 315 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் 332.50 ரூபா என்ற நிலையில் உள்ளது.
  • மக்கள் வங்கி : டொலர் ஒன்றின் கொள்வனவு (313.52) மற்றும் விற்பனை (336.09) பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் உள்ளது.