லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருட்களின் விலையை குறைத்தது

1 year ago
Sri Lanka
aivarree.com

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளது.

இந் நிலையில் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருட்களின் விலையினை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதாக அறிவித்துள்ளது.

அதன்படி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களுக்கான விலை குறைப்புக்கு ஏற்ப லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருட்களின் விலையினை குறைத்துள்ளது.

இந்த தகவலை லங்க ஐ.ஓ.சி. நிறுவனத்தின் தலைவர் மனோஜ் குப்தா அய்வரிச் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

சிபட்கோவின் விலை குறைப்பு விபரம்

  • ஒக்டேன் 92 ரக பெற்றோல் 60 ரூபாவல் குறைப்பு
  • டீசல் ஒரு லீட்டர் 80 ரூபாவால் குறைப்பு
  • 95 ரக பெற்றோல் 135 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 375 ரூபா
  • சூப்பர் டீசல் 45 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 465
  • மண்ணெண்ணெய் 10 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 295 ரூபா