ரூபாவின் பெறுமதியில் சற்று வீழ்ச்சி

11 months ago
aivarree.com

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (02) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

கடந்த வாரத்தில் தொடர்ந்து வலுப்பெற்று வந்த ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்தை விட இன்று சற்று குறைந்துள்ளது.

  • மக்கள் வங்கி ; நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 282.22 ரூபாவிலிருந்து 285.14 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 297.40 ரூபாவிலிருந்து 300.48 ரூபாவாக உயர்ந்துள்ளது.
  • கொமர்ஷல் வங்கி ; நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 283.07 ரூபாவிலிருந்து 285.81 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 296 ரூபாவிலிருந்து 300 ரூபாவாக உயர்ந்துள்ளது.
  • சம்பத் வங்கி ; நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 284 ரூபாவிலிருந்து 286 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 296 ரூபாவிலிருந்து 298 ரூபாவாக உயர்ந்துள்ளது.